கேம் ஓவர் படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ்

தமிழில் சில படங்கள் நடித்து விட்டு காணாமல் போன டாப்ஸி இப்போது கேம் ஓவர் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். கம்ப்யூட்டர் கேமை உள்ளடக்கிய திகில் கதை என்பது டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் கேம் ஓவர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளை இப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ஸ்பெஷல் ஷோ பார்த்ததின் அடிப்படையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

நல்ல திரைக்கதையாகவும் படத்தில் டாப்ஸி சிறப்பாக நடித்திருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்.