Connect with us

மதுரையை அடுத்து மேலும் ஒரு மாவட்டத்தில் முழு ஊரடங்கு: அதிரடி அறிவிப்பு

செய்திகள்

மதுரையை அடுத்து மேலும் ஒரு மாவட்டத்தில் முழு ஊரடங்கு: அதிரடி அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகமாக இருந்த காரணத்தினால் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

இந்த முழு ஊரடங்கில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும், அத்தியாவசியமான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும், இபாஸ் இல்லாமல் வெளியே யாரும் செல்லக்கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை மதுரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மதுரையில் நாளை முதல் அரசு பேருந்துகள் ஓடாது என்றும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அது மட்டுமின்றி பல்வேறு நகரில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் விமானங்கள் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் மதுரையை அடுத்து தற்போது தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார்

தேனி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், நாளை மாலை 6 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்கள் குறிப்பிட்டுள்ள. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே தேனி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

மதுரை தேனி அடுத்து இன்னும் எந்தெந்த ஊர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading
To Top