7ஆம் கட்ட ஊரடங்கு தொடங்கியது: இன்று முதல் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடலாமா?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக ஆறு கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு நேற்று ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது

இந்த நிலையில் இன்று முதல் ஏழாம்கட்ட ஊரடங்கு ஒரு சில கூடுதல் தளர்வுகளுடன் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கில் ஒருசில நிபந்தனைகளுடன் ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே இன்று முதல் ஓட்டலிலும் அமர்ந்து சாப்பிடலாமா என்று பொதுமக்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் முறை கடைபிடிக்கப்பட உள்ளதாக சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது

ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து இடம் ஏற்பாடு செய்ய இரண்டு நாட்கள் ஹோட்டல் உரிமையாளர்கள் அவகாசம் எடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

சென்னையில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் வரும் திங்கட்கிழமை முதல் 50 சதவீத இருக்கை வசதியுடன் ஓட்டல்களில் அமர்ந்து வாடிக்கையாளர்கள் சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது