Connect with us

அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

செய்திகள்

அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் நாளை முதல் அடுத்த கட்ட ஊரடங்கு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நான்கு மாதங்களாக பிறக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்களும் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளும் அவ்வப்போது ஒரு சில சலுகைகளை அறிவித்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட இலவச உணவு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும் இந்தியாவில் ஒருவர்கூட பசியால் உயிரிழந்தார் என்ற நிலை வராது என்றும் உறுதி அளித்தார். இதனை இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மம்தா பானர்ஜி போலவே மற்ற மாநில முதல்வர்களும் இன்னும் ஒரு வருடத்திற்கு அல்லது குறைந்தபட்சம் 2010ம் ஆண்டில் டிசம்பர் வரையாவது இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Continue Reading
To Top