பிளாஸ்டிக்கில் உணவு வழங்கியதாக திருமாவளவன் மீது குற்றச்சாட்டு

திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டி இடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக தன் சொந்த ஊர் சென்றிருந்த திருமா அவர்கள் பலருக்கு அன்னதானம் வழங்கினார்.

அப்போது அவர் பிளாஸ்டிக் தட்டில் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசால் பிளாஸ்டிக் முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஜனவரி முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது,

முக்கிய தலைவரே இது போல ப்ளாஸ்டிக் பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.