முதல் முறையாக வாக்கு அளிக்கும் முதியவர்

தமிழ்நாட்டில் ஓட்டுப்போடும் வாக்கு சீட்டு பழைய முறையானாலும் சரி புதிய எந்திர முறையானாலும் சரி அந்தக்காலத்தில் வாக்குச்சாவடிக்கே தூக்கி வந்து விட்டு ஓட்டுப்போட சொல்வார்கள் கட்சிக்காரர்கள்.

அதன் பிறகு இது போல் விசயங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இப்போதும் மிக மிக வயதான 100 வயதை நெருங்கும் முதியவர்கள் கூட வந்து ஓட்டுப்போடுகின்றனர். யாராவது அவர்களை அழைத்து வந்து ஓட்டுப்போட சொல்கின்றனர்.

இந்நிலையில் 85 வயதான ஒரு முதியவர் இது வரை வாக்கு செலுத்தியதே இல்லை என ஆச்சரியப்படவைக்கிறார்.

வந்தவாசி அருகே
மருதநாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்.இவர்தான் அந்த 85 வயது முதியவர்.

அவரும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரும் முதன்முறையாக இந்த மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மருதநாடு கிராமத்துக்கு சென்று கன்னியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை உபயோகிப்பது குறித்து அவர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

இவர்கள் பல வருடங்களாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.