Connect with us

முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்ட முகின்!!

பொழுதுபோக்கு

முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்ட முகின்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.


காலையில் குறைதீர் கூட்டம் முடிந்த பிறகு, இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது.

முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்ட முகின்!!

வந்தவர்கள் எல்லோரும் வரிசையாக அபிராமி பெயரையே குத்திவிட்டு சென்றனர், வார இறுதியில் ஆரம்பமான அபிராமி – முகின் பிரச்சினை நேற்றும் தொடர்ந்தது, அபிராமி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அந்தப் பிரச்சினையின் தாக்கம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால்தான் என்னவோ, அபிராமி வழக்கம்போல் இந்த வாரமும் நாமினேட் ஆனார்.

அபிராமியுடன், மதுமிதா, கவின், லோஸ்லியா, முகின் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

சாக்‌ஷி வெளியேறியதற்கு கவின் தான் காரணம் என்று கூறி அழுதபடியே அவரை நாமினேட் செய்தார் ஷெரீன்.

மேலும் அபிராமி – முகின் பிரச்சினையால் வார வாரம் அபிராமி மட்டுமே பழிக்கு ஆளாகிறார் என்று கூறி, வந்த அனைவரும் முகினுக்கு ஓட்டுகளைஅள்ளி விளாசி சென்றனர்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் முதன் முறையாக நாமினேட் செய்யப்பட்டார் முகின்.  இரண்டு காதல் ஜோடிகளும் அணியாக நாமினேட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறியாகும்.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top