முதல் பட நாயகனுடன் காதலா- பிரியா வாரியர்

ஒரு கண்ணடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து ஒரு பாடல் பாடியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானவர் பிரியா.

சமூக வலைதளங்கள் அனைத்திலும் இவரை பற்றிய பேச்சாகவே இருந்தது. இது நடந்து நீண்ட நாட்களாகி விட்டது.

இப்போது இவர் முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரோஷனை காதலிப்பதாகவும்,
தன்னுடன் முதல்படத்தில் இணைந்து நடித்த ரோஷனுடன் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது.

பிறந்தநாளன்று ரோஷனுக்கு அனுப்பிய மெசேஜில், ‘நீதான் எனக்கு எல்லாம்’ என்று தெரிவித்திருந்தார். இந்த மெசேஜ்தான் இருவருக்கும் காதல் கிசுகிசுவை கிளப்பிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது இதுபற்றி பிரியா வாரியரிடம் கேட்டபோது,’சினிமாவில் வதந்திகள் தொழிலின் ஒரு அங்கம் என கூறியுள்ளார்.