பிப்ரவரி 24ல் ஆஸ்கார் விருது விழா

ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி 24ல் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டு உலக அளவில் சிறந்த படங்களுக்கான விருதுகளை அமெரிக்காவில் ஆஸ்கார் விருதாக வழங்கி கெளரவிப்பது வழக்கம்.

இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆஸ்கர் விருது பெற வரும் நட்சத்திரங்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். இதற்காக தொழிலாளர்கள் தரையை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவி தயார் செய்து வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டால்பி திரையரங்கில் உலகின் மிகப்பெரிய திரைப்பட விருது விழா அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவில் நடைபெற உள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினர் என்ற திரைப்படத்திற்காக தமிழ் திரை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.