Connect with us

அதிக நேரம் கடை திறந்ததால் உயிரிழந்த தந்தை-மகன்: தூத்துகுடியில் அதிர்ச்சி

செய்திகள்

அதிக நேரம் கடை திறந்ததால் உயிரிழந்த தந்தை-மகன்: தூத்துகுடியில் அதிர்ச்சி

அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்ததால் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது

ஆனால் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தைவிட அதிக நேரம் திறந்து வைத்ததாக அவர்களது கடை மீது காவல்துறையினர் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு காவல் துறையினர் தாக்கியதால் தந்தை மகன் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது

அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சாத்தான்குளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து சாத்தான்குளத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கடையடைப்பு நடத்தி போராட்டம் செய்து வருவதால் அங்கு பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

Continue Reading
To Top