ரசிகர்களை நடுங்க வைத்த நாகவள்ளி கதாபாத்திரம்

கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டையொட்டி வெளியான படம் சந்திரமுகி. இது கன்னட ஆப்தமித்ரா படத்தின் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட கதைதான் என்றாலும் கன்னடத்தில் செளந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா மிக பிரமாதமாக நடித்திருந்தார்.

7900124f555a590c33bb17de289b54d7-1

இருந்தாலும் இந்த கதாபாத்திரத்தின் முன்னோடி மலையாள நடிகை ஷோபனாவே ஆவார். இப்படத்தின் ஒரிஜினலான மணிசித்ர தாழு படத்தில் இது போல தானாக உருவகப்படுத்தி கொள்ளும் கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்திருந்தார்.

தமிழில் சந்திரமுகி, தெலுங்கு பேசும் கதாபாத்திரம், மலையாளத்தில் நாகவள்ளி என்ற நாட்டியப்பெண்ணாக தமிழ் பேசும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஷோபனா பெற்றது குறிப்பிடத்தக்கது.

உயிரோட்டமான நடிப்பை ஷோபனா வெளிப்படுத்தி இருந்ததுதான் ஆப்த மித்ராவில் நடித்த செளந்தர்யாவுக்கும், சந்திரமுகியில் நடித்த ஜோதிகாவுக்கும் முன்னோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போல உயிரோட்டமாக இவரை நடிக்க வைத்தது இயக்குனர் பாஸில்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...