Connect with us

ஹூரோயிசம், ரொமான்ஸ் என கலக்கும் தர்ஷன்..!!

பொழுதுபோக்கு

ஹூரோயிசம், ரொமான்ஸ் என கலக்கும் தர்ஷன்..!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை பற்றி பேசி முடித்து அறிவுரை கூறுவார். அவ்வகையில் தர்ஷன் – வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார். 

இரண்டு நாட்கள் முன்பு இந்த வாரத்திற்கான தலைவர் பதவியை தேர்வு செய்யும் டாஸ்க் நடந்தது. இதில் தன்னால் விளையாட முடியவில்லை என்று கூறி வனிதா, மோகன் வைத்தியா பின் வாங்கிவிட்டனர். இறுதியில் இந்த வாரத்திற்கான தலைவராக சாக்‌ஷி தேர்வானார். 

ஹூரோயிசம், ரொமான்ஸ் என கலக்கும் தர்ஷன்..!!


டாஸ்க் மீது அதிருப்தி தெரிவித்த போது வனிதாவுக்கும் தர்ஷனுக்கும் காரசார விவாதம் நடந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வனிதா தன்னுடைய மைக்கை தூக்கி வீச், பிக்பாஸிடம் பேச வேண்டும் என்று முறையிட்டு வந்தார். ஆனால் பிக்பாஸ் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் அவரே சமாதானம் அடைந்து மைக்கை கையில் எடுத்துச் சென்றார். 

அடுத்தநாள் காலையில் உணவுக்கூடத்தில் மீண்டும் டாஸ்க்கின் போது நடந்த தவறு குறித்த உரையாடல் ஏற்பட்டது. 

அதற்கு வழக்கம் போல எதிர்ப்பு தெரிவிப்பது போல வனிதா கோபப்பட, இதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத தர்ஷன் வனிதாவிடம் சண்டைக்கு போனார். இதனால் கோபமடைந்த வனிதா பிக்பாஸிடம் பேச வேண்டும் என்று கூறி மைக்கை கழட்டி தூக்கி வீசிவிட்டுச் சென்றார். 

கண்டுகொள்ளாத த ர் ஷன் வெளியே சென்று ஷெரினுடன் ரொமான்ஸ் செய்து கொண்டு இருப்பார். முதல் இரண்டு வாரங்கள் முகத்தினை வெளியே காட்டாமல் இருந்த தர்ஷன் இப்போது ஹூரோயிசம், ரொமான்ஸ் என கலக்குவது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..

Continue Reading

அதிகம் படித்தவை

To Top