என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு… பதறும் வித்யா பிரதீப்!!

என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு… பதறும் வித்யா பிரதீப்!!

வித்யா பிரதீப்  இந்திய மாடல், நடிகை, ஆராய்ச்சி மாணவர் எனப் பல துறைகளிலும் கலக்கி வருகிறார். இவர் இதுவரை 13 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் துவக்கத்தில் சைவம் மற்றும், பசங்க 2 படத்தின்மூலம் ஓரளவு அறியப்பட்டவர்.  அதுமட்டுமின்றி அதிபர், ஒன்னுமே புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, தலைகால் புரியல, அசுர குலம், ஒத்தைக்கு ஒத்தை, மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்ததன்மூலம் பிரபலமானார், அந்தக் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக பொருந்தியிருப்பார்.

வித்யா பிரதீப், தற்போது சன் டிவியில் 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு டஃப் காம்பிட்டிஷன் கொடுத்துவரும் நாயகி சீரியல் பல ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

கங்கனா – அர்விந்த்சாமி நடிப்பில் உருவாகிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் வித்யா பிரதீப் நடித்து வருகிறார்.

தற்போது சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் என் பெயரில் டிவிட்டரில் போலி கணக்கு தொடங்கி பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அது போலியான கணக்கு, நான் என் நண்பர்கள் மூலமே அதைத் தெரிந்து கொண்டேன். அது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது” என்று கூறியுள்ளார்.