Connect with us

பிறந்தநாளில் காதல் தோல்வியால் மனம் குமுறும் சாக்ஷி!

பொழுதுபோக்கு

பிறந்தநாளில் காதல் தோல்வியால் மனம் குமுறும் சாக்ஷி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, 4 வாரங்களை சிறப்பாக முடித்த நிலையில், நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன் கவினும் சாக்ஷியும் காதல் கொண்டனர், இதனை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டனர், இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து காதலித்து வந்த நிலையில், மறுபுறம் லோஸ்லியாவையும் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சாக்‌ஷி கொடுத்த சாக்லெட்டை, லோஸ்லியாவிடம் கொடுத்து லோஸ்லியா கொடுத்த சாக்லெட்டை கவின் சாப்பிட்டார். 

பிறந்தநாளில் காதல் தோல்வியால் மனம் குமுறும் சாக்ஷி!

இதனால் கவின் சாக்ஷி காதலில் ஆட்டம் ஏற்பட்டது. நேற்றைய சந்திப்பின் முதலில் கமல் ஹாசன் சாக்‌ஷிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கமல்ஹாசன் கவின் சாக்ஷி காதல் குறித்து கேட்டபோது, “காதலிக்கு ஒரு ஆண் தனது காதலிகிட்ட எப்படி பேசுவாங்க. உணர்வுப்பூர்மாகவும், மனரீதியாகவும் நான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளேன். 4 பேர் கிட்ட எப்படி நடந்துக்கிட்டேனோ, அது போன்று இப்பவும் இருக்கிறேன் என்று கூறுவது என்னை எனக்கு உள்ளுக்குள் கொலை செய்வது போன்று தோன்றுகிறது. இதன் பிறகு மன்னிப்பு, இதயம் வடிவத்தில் சாக்லெட் கொடுத்தாலும் வேண்டாம்” என்று கூறி கதறி அழுதார் சாக்ஷி.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top