பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது!

சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் பல்வேறு நாடுகளில் முடங்கியுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசெஞ்சர் செயலிகளும் முடங்கியுள்ளது.

Facebook Instagram down

குறிப்பாக வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள பலருக்கும் புதன்கிழமை( 13-03-2019) இரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசெஞ்சர் செயல்படவில்லை.

சிலர் தங்களின் கணக்கில் உள்நுழைய முடியவில்லையென்றும், சிலர் பேஸ்புக் பக்கங்கள் திறக்கவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

பேஸ்புக் மட்டுமன்றி பேஸ்புக்கிற்கு நிறுவனத்தின் இதர செயலிகளான இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் செயலிகளிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனைக்கான சரியான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக பேஸ்புக்கின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்தக் கோளறு சரி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் பேஸ்புக்கில் கோளாறு ஏற்பட்டாதால் பலரும் பதிவிட முடியாமல், ட்விட்டர் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களில் இந்தப் பிரச்சனைப் பற்றி தெரிவித்து வருகின்றனர்.