Connect with us

நாளை முதல் பேருந்துகள் ஓடும்: 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிப்பு

செய்திகள்

நாளை முதல் பேருந்துகள் ஓடும்: 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிப்பு

சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நிர்வாக வசதிகளுக்காக 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில்‌ பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல்‌ நடைமுறைப்படுத்தும்‌ பொருட்டு, மாநிலம்‌ கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது

  1. கோயம்புத்துர்‌, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்‌, கரூர்‌, சேலம்‌ மற்றும்‌ நாமக்கல்‌
  2. தருமபுரி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ கிருஷ்ணகிரி
  3. விழுப்புரம்‌, திருவண்ணாமலை, கடலூர்‌ மற்றும்‌ கள்ளக்குறிச்சி
  4. நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ புதுக்கோட்டை
  5. திண்டுக்கல்‌, மதுரை, தேனி, விருதுநகர்‌, சிவகங்கை மற்றும்‌ இராமநாதபுரம்
  6. தூத்துகுடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
  7. காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு
  8. சென்னை காவல்‌ எல்லைக்குட்பட்ட பகுதி

மண்டலம்‌ 7-ல்‌ உள்ள காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ மண்டலம்‌ 8ல்‌ உள்ள சென்னை காவல்‌
எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌ தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள்‌, 50 விழுக்காடு பேருந்துகள்‌ மட்டும்‌ இயக்கப்படும்‌.

மண்டலம் ‌7 மற்றும்‌ மண்டலம்‌ 8-க்கு உட்பட்ட பகுதிகளில்‌ பொது போக்குவரத்து பேருந்‌துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Continue Reading
To Top