தேர்வு நெருங்குகிறது-2

 

அடுத்து,

2. காட்சிப்படுத்துதல் முறையின் மூலம் நாம் இப்போது பாடங்களை படித்தாகிவிட்டது. உங்கள் பாடப்புத்தகத்தில் உள்ள செய்திகள் பொதுவாக மிகவும் விரிவாக தொகுக்கப்பட்டு இருக்கும். அது உங்களுக்கு பாடம் நன்றாக விளங்க வேண்டும் என்பதற்காக தானே தவிர எல்லாவற்றையும் நீங்கள் படித்தே ஆகவேண்டும் என்பதற்காக இல்லை.

இப்போது என்ன செய்ய வேண்டும்?, புத்தகத்தை அப்படியே மூடி வைத்து விட்டு நீங்கள் படித்த பாடப்பகுதியின் சாராம்சத்தை -என்ன படித்தீர்களோ அதை உங்களுக்கு புரியும் வகையில் சிறு சிறு குறிப்புகளாகவோ அல்லது சிறு பத்தியாகவோ எழுதத் துவங்க வேண்டும். இது போன்று எல்லாவற்றையும் எழுதுவதால் நேரம் வீணாகாதா என்று கேட்டால் அது தான் இல்லை.

“ஒரு முறை எழுதிப் பார்ப்பது என்பது பல முறை படித்து மனப்பாடம் செய்வதற்கு சமம்.”

be09898c07b5c7b204299681e28bdca4

3. எழுதி வைத்துள்ள பாடப்பகுதியையும் புத்தகத்தில் உள்ள பாடப்பகுதியையும் சரிபாருங்கள். எல்லாவற்றையும் சரியாக எழுதி இருக்கிறோமா என ஒரு முறை பாருங்கள்.

இங்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். நீங்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவராக இருந்தால் தயவு செய்து வினாக்களை நீங்களே உருவாக்கி அதற்கான பதில்களை எழுத பழகுங்கள். ஆசிரியர்கள் எழுதி போடுவதை அப்படியே எழுதி பழக வேண்டாம். உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு அதற்கான பதிலை நீங்களே கண்டறியும் போதுதான் படித்த எந்தவொரு விஷயமும் மறக்காது. உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பாடத்தைப்பற்ற்றியும் அதற்கு தொடர்புடைய செய்திகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக முக்கோணவியல் (Trigonometry) படிக்கின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் sin, cos, tan, cosec, sec, cot என இருக்கும். அவற்றின் ஃபார்முலாக்களும் உங்களுக்கு சொல்லித்தரப்படும்.

உங்களில் எத்தனைபேருக்கு நிஜவாழ்க்கையில் முக்கோணவியலின் பயன்பாடு தெரியும் என்று இதுவரை யோசித்து இருக்கிறீர்களா?   உங்களுக்கு தோன்றும் கேள்விகளை எல்லாம் ஒரு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள், பெரியவர்களிடம், ஆசிரியர்களிடம், ஏன் கூகுளில் கூட தேடுங்கள் கண்டிப்பாக சில பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மலைகளின் உயரத்தை அளக்க, வீடியோ கேம்களில், கட்டிடக்கட்டுமானத்தில், விமான கட்டுமானத்தில் இது போன்ற பலவற்றிலும் முக்கோணவியலின் பயன்பாடு உள்ளது. 

இதே போன்றுதான் இயற்பியல் படிக்கும் போது நியூட்டன் விதிகள், வேதியியலில் நீர் மூலக்கூறு உருவாக்கம், உயிரியலில் ஒளிச்சேர்க்கை என நாம் சொல்லிகொண்டே போகலாம்.

படிக்கும் விஷயங்களை முடிந்த அளவு நம் இயல்பு வாழ்க்கையோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் அல்லது அவற்றின் பயன்களை பற்றி அறிந்து கொள்வதும் மிக முக்கியம்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு..

குறள்.

தொடரும்,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews