Connect with us

அமலாக்கத்துறையில் ஆஜரான ப. சிதம்பரம்

செய்திகள்

அமலாக்கத்துறையில் ஆஜரான ப. சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இந்திரா காந்தி காலத்தில் இருந்தே அவர் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

கடந்த காங் ஆட்சியில் அமைச்சராக இருந்த இவர் மீது பிஜேபி அரசு வந்த உடன் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று

ஐ.என். எக்ஸ் மீடியா வழக்குத் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 5 மணி நேரத்திற்கும் கூடுதலாக விசாரணை நடத்தினர். 

மத்திய நிதிமைச்சராக அவர் இருந்த காலகட்டத்தில், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, டெல்லி ஜாம்நகரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜரானார்.

5 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் அமலாக்கத்துறையினர் கேள்விகளை எழுப்பினர். பீட்டர் மற்றும் இந்திராணி ஆகியோரை சந்தித்தது தொடர்பாகவும், ஐ.என்.எக்ஸ். நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு மூலதனம் கிடைக்க உடனடியாக ஒப்புதல் வழங்கியது தொடர்பான கேள்விகளுக்கு சிதம்பரம் பதில் அளித்தார். முன்னதாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top