ஜனங்களின் நகைச்சுவை கலைஞன் ஜனகராஜ்- ஒரு பார்வை

ஒரு காலத்தில் கமல் , ரஜினி நடிக்கும் அனைத்து படங்களிலும் நடித்தவர் ஜனகராஜ். பிஸியான நடிகராக இருந்த இவர் 2000ங்களுக்கு பின்னரும் பிரசாந்த் நடித்த ஆயுதம், சேரனின் சொல்ல மறந்த கதை, மணிரத்னத்தின் ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

708eb1d18da9c36c3ce439984ce8e6f5

கவுண்டமணி செந்தில் காமெடியை எந்த அளவுக்கு ரசித்தார்களோ அந்த அளவிற்க்கு ஜனகராஜின் நகைச்சுவையை பலரால் மறக்க முடியாது.

1945ம் ஆண்டு பிறந்த ஜனகராஜ் 1970களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்தார் 77ல் வெளிவந்த செவப்புவில்லு படத்தில் முழுமையான நடிகராக வெளிப்பட்டார் தொடர்ந்து புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களில் டவுசர் போட்டுகொண்டு நடித்திருப்பார்.

பாலைவனசோலை படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்தது.1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன.

1982ஆம் ஆண்டு வெளியான பார்வை (1982), பின் தொடர்ந்த அபூர்வ பேரர்கள் (1983), மீண்டும் கோகிலா (1983), சிந்து பைரவி (1985), ராஜாதி ராஜா (1989), அபூர்வ சகோதரர்கள் (1989), அக்னி நட்சத்திரம் (1989), மற்றும் புதுப் புது அர்த்தங்கள் (1989), அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.

84ல் வெளிவந்த உதயகீதம் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி சரமாரி ஹிட்டானது .

தொடர்ந்து இந்த ஜோடியை நகைச்சுவை எழுத்தாளர் வீரப்பன் அவர்கள் பல படங்களில் தனது நகைச்சுவை வசனத்தில் பல படங்களில் பயன்படுத்திக்கொண்டார்.

இந்த நேரங்களில் கவுண்டமணி செந்திலுக்கு மாற்று யாரென்று கேட்டால் ஜனகராஜ்தான்.

முதல் மரியாதையில் மனைவியை சந்தேகப்படும் காட்சியாகட்டும், ஆண் பாவம் படத்தில் இலங்கை தமிழர் பந்த் அன்று கடைத்திறப்பு விழா நடத்தி மாட்டிகொள்வதாகட்டும் இதயத்தாமரையில் சீனி வெடியை சிகரெட் போல பற்றவைத்து வாய் சிதறுவது,புடலங்காய் என நினைத்து பாம்போடு வலம் வருவது,அக்னி நட்சத்திரம் படத்தில் வி.கே ராமசாமியுடன் சேர்ந்து ப்ளூ பிலிம் பார்ப்பது, மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு பஸ் ஸ்டாண்டில் துள்ளிகுதிப்பது, அண்ணா நகர் முதல் தெருவில் என்னவோ போடா மாதவா என்று தன்னையே பெருமையாக நினைத்துகொண்டு வீட்டில் தங்குவதற்காக வந்த சத்யராஜை ஊருக்கு அனுப்ப போடும் திட்டங்கள் தோல்வியடைவது, புது புது அர்த்தங்களில் அஜால் குஜால் இசைக்கலைஞராக வருவது, படிக்காதவன் படத்தில் தங்கச்சியை நாய் கட்சிச்சுப்பா என குடித்துவிட்டு அழுவது, அபூர்வ சகோதரர்கள் எங்க்கேயோ போயிட்டிங்க, கேளடி கண்மணியில் கனவால் வரும் பிரச்சினைகள் என ரசிக்கவைத்தன இவரது காட்சிகள்.

நகைச்சுவை போக நாயகனில் கமலுக்கு உதவியாளராக வருவது, ஊமைக்குயில், ஆயுதம் போன்ற படங்களில் நல்ல வில்லத்தனத்தை வெளிப்படுத்தியது என ஜனகராஜ் பன்முகத்திறமை கொண்ட நடிகராக விளங்கியவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews