‘காலா’ பட நடிகைக்கு கிடைத்த ‘பாலா’ பட வாய்ப்பு

'காலா' பட நடிகைக்கு கிடைத்த 'பாலா' பட வாய்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஈஸ்வரி ராவ். ரஜினியுடன் நடிக்க இளம் நடிகைகள் எல்லாம் போட்டி போட ஈஸ்வரி ராவை தேர்வு செய்தார் இயக்குனர் ரஞ்சித்

இந்த நிலையில் காலா படம் வெளியாவதற்கு முன்பே ஈஸ்வரிராவுக்கு மேலும் ஒரு தமிழ் படம் ஒப்பந்தமாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்க விக்ரம் மகன் அறிமுகமாகும் வர்மா படத்தில் ஈஸ்வரி ராவ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதை படக்குழு ரகசியமாக வைத்திருந்தாலும் இந்த தகவல் தற்போது கசிந்துவிட்டது.

வர்மா படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் ஒரு வேலைக்காரி வேடம் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வேடத்தையே பெரிய கதாபாத்திரமாக்கி அதில் நடிக்க பாலா ஈஸ்வரிராவை நடிக்க வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது