Connect with us

கொரோனா வார்டுக்கு 50 பெட்கள் நன்கொடை செய்த புதுமண தம்பதிகள்

செய்திகள்

கொரோனா வார்டுக்கு 50 பெட்கள் நன்கொடை செய்த புதுமண தம்பதிகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்த நிலையில் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெட்கள் பற்றாக்குறை உள்ளதை அறிந்த புதுமண தம்பதிகள் மும்பை அரசு மருத்துவமனைக்கு தங்கள் திருமண பரிசாக 50 பெட்களை நன்கொடையாக கொடுத்துள்ளனர்

மும்பையைச் சேர்ந்த எரிக் மற்றும் மெர்லின் ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள் மத்தியில் சிறப்பாக நடந்தது. திருமணம் முடிந்ததும் நேராக அரசு மருத்துவமனைக்கு சென்ற இந்த தம்பதிகள், மருத்துவமனை நிர்வாகிகளை சந்தித்து தாங்கள் அரசு மருத்துவமனைக்கு தங்களுடைய திருமண பரிசாக 50 பெட்கள் கொடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகி தம்பதிகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து, அவர்களுடைய நன்கொடைகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை அடுத்து லாரியில் தயாராக வைக்கப்பட்டிருந்த 50 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகள் ஆகியவை வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அந்த தம்பதிகள் தங்கள் கைகளாலேயே நன்கொடையாக கொடுத்தார்கள்.

இதற்கு அந்த மருத்துவமனைகள் நிர்வாகிகள் அந்த புதுமண தம்பதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top