எங்கு காணினும் இறைவன் – திருவெம்பாவை பாடலும் விளக்கமும்-13

ae967ac15496e500807bdf4a7d3e03fa

பாடல்…

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்றுஇசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்ப
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.

பொருள்..

நீர் நிறைந்த குளிர்ந்த தடாகத்தில் கருங்குவளை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. உமையம்மை குவளை மலர் நிறம் உடையவள். குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. நாம் வணங்கும் இறைவன் செந்தாமரை மலர்நிறம் உடையவன். அழகிய நீர்ப்பறவைகள் ஒலி எழுப்புவதாலும் உடல் அழுக்கும், உள்ள அழுக்கும் நீங்க மக்கள் குளிப்பதாலும் இந்நீர்நிலை அம்மையப்பனாகக் காட்சி தருகிறது. நீர் பொங்கிவரும் இக்குளத்தில் தாவிக் குதித்து வளையல்களும், சிலம்புகளும் ஒலிக்க நெஞ்சம் பூரிக்க நீராடுவோம்.

விளக்கம்..

குளத்தில் கருங்குவளை பூக்கள் நிறைந்திருக்கு. குவளை என்னும் வெள்ளை அல்லி நிறத்தில் உமையவள் இருப்பாள். அப்பனோ செந்தாமரையைப்போல சிவந்த மேனியைக்கொண்டவன்.  உடல் அழுக்கை போக்கும் குளம், மன அழுக்கினை போக்கும் அம்மையப்பனுக்கு ஒப்பானதாகும். அப்பேற்பட்ட சிறப்புகள் வாய்ந்த குளத்தில் நீராடுவோம் வா பெண்ணே! என பெண்ணை எழுப்புவதாய் அமைந்தது இப்பாடல்..

 

திருவெம்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்…

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews