தமிழுக்கு வரும் தனுஷின் இங்லீஷ் படம்

தனுஷ் எப்போது ஹாலிவுட் சென்றார் என்றே பலருக்கு தெரியாது இந்நிலையில் தனுசின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அவர் நடித்த

ஹாலிவுட்டில் உருவான ‘தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்’ படம் தமிழில் பக்கீராக வருகிறது

இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் தனுஷ் மாமனா ரஜினி போலவே ஆங்கில படத்தில் நடித்து சாதனை படைத்து உள்ளார். இப்படத்தை கென் ஸ்காட் என்ற இயக்குனர் இயக்கி உள்ளார்.

ஏற்கனவே இப்படம் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

இதுகுறித்து கூறிய இயக்குனர் கென் ’தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர், ஸ்பெயினில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அங்கு தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கடல் தாண்டியும் தனக்கு ரசிகர்கள் உருவாகியிருப்பதை இயக்குனரின் டுவிட் மூலம் அறிந்த தனுஷ், கென் ஸ்காட்டுக்கு நன்றி தெரிவித்து ‘இந்த வெற்றி உங்களால் சாத்தியமாகியிருக்கிறது’ என மகிழ்ச்சி பகிர்ந்திருக்கிறார்.