மேற்குஇந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சற்றுமுன் முடிவடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 369 ரன்கள் எடுத்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனால்172 ரன்கள் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 226 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 399 ரன் வெற்றிபெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது

இந்த இமாலய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அனைத்து விக்கெட்டுக்களையும் 129 ரன்களுக்கு இழந்ததால் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது. மேலும் ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் ஸ்டார்ட் பிராடு பெற்றார். மேலும் அவர் இந்த போட்டியில் 500 விக்கெட்டுக்களை வென்ற 7வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 369/10

போப்: 91
பட்லர்: 67
பிராடு: 62
பர்ன்ஸ்: 57

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 197/10

ஹோல்டர்: 46
டெளரிச்: 37
கேம்பெல்: 32

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 226/2 டிக்ளேர்

பர்ன்ஸ்: 90
ரூட்: 68 அவுட் இல்லை
சிப்லே: 56

மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 129/10

ஹோப்: 31
பிளாக்வுட்: 23
புரூக்ஸ்: 22

ஆட்டநாயகன்: ஸ்டார்ட் பிராடு
தொடர் நாயகன்: ஸ்டார்ட் பிராடு