வெற்றி பெறும் நிலையில் இங்கிலாந்து: ஸ்கோர் விபரம்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னின்ங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 469 ரன்கள் எடுத்த நிலையில் மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணி 182 ரன்கள் பின் தங்கியுள்ளது

இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி தற்போது 219 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இன்று 300 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.