மேற்கிந்திய தீவுகள் அணியை பழிவாங்கியது இங்கிலாந்து: இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றி

இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தது அந்நாட்டு அணிக்கும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது

இந்த நிலையில் இந்த தோல்விக்கு பழி வாங்கும் வகையில் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது

மான்செஸ்டர் நகரில் கடந்த 16ம் தேதி தொடங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 287 ரன்கள் மட்டுமே எடுத்ததால் முதல் இன்னிங்சில் 182 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை பெற்றது

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அந்த அணி 129 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்ததால் மேற்கிந்திய தீவுகள் அணி 312 ரன்கள் வெற்றி இலக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்டது

ஆனால் அந்த அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமனில் உள்ளது என்பதும் இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி வரும் 24ஆம் தேதி அதே மான்செஸ்டர் நகரில் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது