எந்திரன் பட விவகாரம்- இயக்குனர் தயாரிப்பாளர் மீதான வழக்கு ரத்து

கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தது எந்திரன் திரைப்படம்.

2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காப்புரிமை மற்றும் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதிமாறனுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விசாரணையை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி புகழேந்தி, வழக்கில் இருவர் மீதான மோசடி புகாரை ரத்து செய்து உத்தரவிட்டார்.

காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கர் மீதான புகாருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இருந்தால் எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.