எந்தெந்த திதியில் பிறந்தவர்கள், என்னென்ன வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்?!

கடவுளை எந்த நேரத்திலும் கும்பிடலாம்தான். ஆனா, சில குறிப்பிட்ட நாட்களில் கும்பிடும்போது கூடுதலா பலன் கிடைக்கும். மொத்தம் அமாவாசை தினத்திலிருந்து பௌர்ணமிவரையிலான 15 நாட்களுக்கு பெயர்களிட்டு அந்த நாளை திதி என அழைப்பது நமது வழக்கம். வளர்பிறை திதி, தேய்பிறை திதின்னு மாதத்தில் இருமுறை வரும் இந்த திதி. எந்தெந்த திதியில் பிறந்தவங்க அவரவர் இஷ்ட தெய்வத்துக்கு என்னென்ன வைத்து வணங்கினால் பலன் கிடைக்கும்ன்னு நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அதன்படி இறைவனை வழிபட்டால் கூடுதல் பலன் பெறலாம்.

1.பிரதமை அன்று பிறந்தவர்கள்
அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை அன்று பிறந்தவர்கள்
சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்
.
3. திருதியை அன்று பிறந்தவர்கள்
பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி அன்று பிறந்தவர்கள்
பட்சணம் படைத்து வழிபடவேண்டும்
.
5. பஞ்சமி அன்று பிறந்தவர்கள்
வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்
.
6. சஷ்டி அன்று பிறந்தவர்கள்
தேன் படைத்து வழிபடவேண்டும்.7. சப்தமி அன்று பிறந்தவர்கள்
வெல்லம் படைத்து வழிபடவேண்டும்
.
8. அஷ்டமி அன்று பிறந்தவர்கள்
தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.

9. நவமி அன்று பிறந்தவர்கள்
நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.

10. தசமி அன்று பிறந்தவர்கள்
கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.

11. ஏகாதசி அன்று பிறந்தவர்கள்
தயிர் படைத்து வழிபடவேண்டும்.

12. துவாதசி அன்று பிறந்தவர்கள்
அவல் படைத்து வழிபடவேண்டும்.

13. திரயோதசி அன்று பிறந்தவர்கள்
கடலை படைத்து வழிபடவேண்டும்.

14. சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள்
சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.

15. பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபடவேண்டும். இப்படி நைவேத்தியமாய் படத்தவைகளை யாருக்காவது தானம் செய்தால் உங்களுக்கு புண்ணிய பலன் கிடைக்கும்.நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு படைப்பதும் குறிப்பாக அம்பாளுக்கு படைப்பது சிறந்தது