எந்தெந்த மலரால் எந்தெந்த பெண் தெய்வங்களை பூஜிக்கனும்?!


4d652ed16b5092d174605ef7c4a17fd8

கோவிலுக்கு சென்று அர்ச்சனை தட்டை வாங்கி இறைவனுக்கு சமர்பிப்பது நமது வழக்கம். பொதுவா அந்தந்த சீசனில் கிடைக்கும் விலை மலிவான பூக்களையே அர்ச்சனை தட்டில் வைத்திருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு இறைவனுக்கும் இந்தந்த மலர்களைதான் சமர்பிக்க வேண்டும் என நியதி இருக்கின்றது. இன்று பெண் தெய்வங்கள் சிலவற்றிற்கு எந்த மலர்களை சமர்பிக்க வேண்டுமென இந்த பதிவில் பார்க்கலாம். கோவிலுக்கு செல்லும்போது அந்தந்த அம்மனுக்கு உகந்த மலர்களை சமர்பித்து நலன் பெறுவோம்.

4a675b082fc3c2318fa984c1c5b39621

தேவி துர்கா

அன்னை பார்வதிதேவியின் முக்கியமான அவதாரமே இந்த தேவி துர்கா அவதாரம். இந்த அன்னை வீரம், விவேகம் மற்றும் போர் போன்றவற்றை பறைசாற்றும் திருவுருவமாக எழுந்தருளுகிறார். இவருக்கு தேவி பவானி என்றும் பெயர். இவருக்கு பொதுவாக சிவப்பு நிற ஆடைகளை அணிவித்து, சிவப்பு செம்பருத்தி, சிவப்பு செவ்வரளி, சிவப்பு தாமரை மற்றும் மற்ற சிவப்பு நிற மலர்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம். மேலும், சங்கு புஷ்பம் தேவி துர்காவிற்கு விருப்பமான மலராகும். இந்த மலரிற்கு அபரஜித்தா என்ற பெயரும் உண்டு. இதற்கு எவரும் வீழ்த்த முடியாதவர் என்று பொருளாகும். இந்த சங்கு புஷ்பம் நான்கு வண்ணங்களில் காணப்படுகிறது. வெள்ளை, பழுப்பு ஊதா நிறம், லேசான நீல நிறம், ராயல் புளூ கலர் என்ற நிறங்களில் காணப்படுகிறது. கடம்பு மலர் மற்றொரு விருப்பமான மலராக உள்ளது. இந்த மரம் கடம்பவன வாசினி என்று அம்மன் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த மரம்தான் தல விருட்சமாக உள்ளது.

a2532c8b6626e79bf041a6325a8c644b

தேவி பார்வதி

தேவி பார்வதி சிவபெருமானின் துணைவி என்று எல்லாருக்குமே தெரியும். இவர் துர்கா தேவியின் மூல அவதாரம். இவர் தனது பக்தர்களுக்கு நல்ல உடல் நலம், செல்வம், நீண்ட ஆயுள், வலிமை, சுமங்கலி பாக்கியம், திருமண பாக்கியம் போன்றவற்றை வரமாக கொடுத்து அருள் புரிகிறார். இவருக்கும் சிவப்பு நிற மலர்கள் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் செம்பருத்தி, தாமரை மிகவும் விருப்பமானது. மேலும் மற்ற பூக்களான சம்பங்கி பூ, குண்டு மல்லி, ஆரஞ்சு வண்ண பாலாசம் பூக்கள் போன்றவை இவருக்கு படைக்க சிறப்பான பூக்களாக உள்ளது.

fb806d6af79efbb19c93593620525697

லட்சுமி தேவி

செல்வங்களின் அதிபதி லட்சுமிதேவி. இவருக்கு தங்க ஆபரணங்களையும், சிவப்பு நிற ஆடைகளையும் அணிந்து அலங்கரிப்பர். இவர் தாமரைமீது வீற்றிருந்து அருள் புரிவார். எனவே இவருக்கு தாமரை மிகவும் பிடித்தமான பூவாகும். இவர் கடவுள் விஷ்ணுவை மணந்து கொண்டார். அவரும் தாமரைமீது வீற்றிருந்து காட்சி அளிப்பவர். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி பூக்கள் போன்றவற்றை கொண்டு இவருக்கு பூஜிக்கலாம்.

f2587d22924f2c8018dfbb2828607cac

தேவி சரஸ்வதி

அறிவுக்கு சொந்தக்காரி இந்த சரஸ்வதி தேவி ஆவார். அவரை வழிபடும் எல்லாருக்கும் அறிவு, கல்வி வழங்கி அருள் புரிவார். இவர் வெள்ளை தாமரையில் வீற்றிருந்து கையில் வீணையை கொண்டு காட்சியளிப்பார். ஸ்வேதா அல்லது ஸ்வேதாம்பரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இதற்கு வெள்ளை ஆடையை அணிந்தவர் என்றும் ஸ்வேத்பத்மாசனா என்பதற்கு வெள்ளை தாமரை யில் வீற்றிருப்பவர் என்ற பொருளும் உண்டு. இவருக்கு வெள்ளை தாமரை மற்றும் மற்ற வெள்ளை நிற மலர்களை கொண்டு பூஜித்தால் நல்லது. இவருக்கு நறுமணம் கமழும் பூக்களான குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.பாலாசம் பூக்கள் கூட இவருக்கு விருப்பமான ஒன்றாகும். அதைக் கொண்டும் சரஸ்வதி தேவிக்கு வழிபாடு செய்யலாம்.

f6064de4388aacc4594f607d3cc63da9-1

தேவி மகாகாளி

தேவி மகாகாளி வீரம் நிறைந்த போராட்டம் குணமுடன் காணப்படுபவர். இவர் அரக்கர்கள், தீய சக்திகள் மற்றும் நமது பயங்களை அழிப்பவர். இவர் பார்வதி தேவியின் ஆக்ரோஷமான கோபத்துடன் தோன்றிய அவதாரம். இவர் கருமை நிற சருமத்தையும் கையில் சூலாயுதம் மற்றும் அரக்கனின் தலையை வெட்டி அவர் இரத்தத்தை ஒரு சட்டியில் பிடித்தபடி ஆக்ரோஷமான தோற்றத்துடன் காணப்படுவார். இவரை வழிபட்டால் எதிரிகளிடமிருந்து நம்மை காத்து பயத்தை போக்கி அருள் புரிவார். தீபாவளி பண்டிகையின் இரவு நேரங்களில் அன்னை மகாகாளியை வழிபாடு செய்வது நல்லது. இவருக்கு சிவப்பு நிற செம்பருத்தி, மஞ்சள் அரளிப் பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.

எந்தெந்த தெய்வத்துக்கு என்னென்ன மலர்களால் பூஜிக்க வேண்டுமென தெரிந்துக்கொண்டு அந்தந்த மலர்களை கொண்டு பூஜித்து எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ்வோம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews