Connect with us

ஆஜராக சொல்லிவிட்டு சுட்டு கொன்றுவிட்டனர். ரவுடிகளின் உறவினர் குற்றச்சாட்டு

செய்திகள்

ஆஜராக சொல்லிவிட்டு சுட்டு கொன்றுவிட்டனர். ரவுடிகளின் உறவினர் குற்றச்சாட்டு

நேற்று மதுரையில் போலிசாரால் என்கவுண்டர் செய்து சுட்டுக்கொல்லப்பட்ட முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகளின் உறவினர்கள் போலீசார் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த என்கவுண்டர் குறித்து முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, போலீசார் தான் இருவரையும் சரண் அடைய கூறியதாகவும், அவர்களை நம்பி இருவரையும் நாங்கள் அழைத்து வீட்டில் வைத்திருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு போலீசார் கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

2 ரவுடிகளும் சரணடைந்த பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார் சொன்ன சொல்லை காப்பாற்றாமல் இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இருவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் இருவரது குடும்பத்தினருக்கு போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை கூட பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top