எலுமிச்சையில் இப்படி ஒரு ஜூசா?!

தேவையான பொருட்கள்

எலுமிச்சம் பழம் – 1 (பெரியது)
தண்ணீர் – 1 கப்
பால் – 1/4 கப்
சீனி – 5 டேபிள் ஸ்பூண்
வனிலா எஸ்ஸென்ஸ் – 1/2 டீஸ்பூண்
ஐஸ் தண்ணீர் – 1 கப்

 

செய்முறை :

எலுமிச்சம் பழத்தை நன்றாகப் பிழிந்து சாறு எடுக்கவும். மிக்ஸி ஜாரில் எலுமிச்சைச் சாறு, ஒரு கப் தண்ணீர், பால், சர்க்கரை ,வனிலா எஸ்ஸென்ஸ் எல்லாவற்றையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.  இதனுடன் ஒரு கப் ஐஸ் தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணி கிளாஸில் ஊற்றி பரிமாறவும். 

எலுமிச்சை ஜூசா என ஏளனமாய் பார்க்குறவங்களும் இதை விரும்பி குடிப்பாங்க.