Connect with us

எனக்கு அது கல்யாணம்ன்னே தெரியாது: ஷூட்டிங்கின்னு நினைச்சேன்: பீட்டர்பால் மனைவி

பொழுதுபோக்கு

எனக்கு அது கல்யாணம்ன்னே தெரியாது: ஷூட்டிங்கின்னு நினைச்சேன்: பீட்டர்பால் மனைவி

வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது கல்யாணம் என்பது தனக்கு தெரியாது என்றும் ஷூட்டிங் என்று தான் நினைத்ததாகவும் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தான் நடிகை வனிதாவை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே பீட்டர் பால் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் அதே நேரத்தில் தனக்கு விவாகரத்து கொடுத்த பின்னர் தான் திருமணம் செய்வேன் என்று உறுதி அளித்ததாகவும் பேட்டியில் கூறிய ஹெலன், வனிதாவுக்கும் திருமணம் நடப்பதாக வந்த செய்தி தவறு என்றும் அது வெறும் ஷூட்டிங் என்றும் தன்னிடம் பீட்டர்பால் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஆனால் திருமணம் நடந்த பின்னர்தான் அது ஷூட்டிங் இல்லை உண்மையான திருமணம் என்று தனக்கு தெரிந்ததாகவும் இதனால் தான் ஏமாற்றப்பட்டதால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ஹெலன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தனது கணவர் மீண்டும் தனக்கு வேண்டும் என்றும் தனது குழந்தைக்கு அப்பா வேண்டும் என்றும் தனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். தனது கணவர் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவர் தான் எனது கணவர் என்றும் அவரை தன்னால் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை வனிதாவின் இரண்டு திருமணங்கள் ஏற்கனவே சர்ச்சையில் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது திருமணம் நடந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இந்தத் திருமணமும் சர்ச்சையில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
To Top