ரூ.13,200 ஊதியத்தில் எலக்ட்ரீஷியன் வேலை

மத்திய அரசின் மசகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்டில் (Mazagon Dock Shipbuilders Limited) காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் (Electrician)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.13,200 ஊதியத்தில் எலக்ட்ரீஷியன் வேலை

காலிப்  பணியிடங்கள் :

எலக்ட்ரீஷியன் (Electrician)   பிரிவில் 366   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். ஐடிஐ படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 13,200  முதல் ரூ.49,910 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.mazagondock.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://mazagondock.in/writereaddata/career/Advt_No_89_722019105043AM.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-07-2019