தேர்தல் முடிவுக்கு முன்னரே தல படத்தின் முடிவுகள்

அஜீத் தற்போது ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதற்கு நேர்கொண்ட பார்வை என பெயர் இடப்பட்டுள்ளது. இப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன்பு தல ரசிகர்கள் மிக பெரிய வெற்றி கொண்டாட்டத்தை நடத்தினர்.

விஸ்வரூபம் படத்துக்கு இதுவரை எந்த நடிகருக்கும் இல்லாத அளவு டிஜிட்டல் பேனர்கள் எல்லாம் வைத்து தக தக என தலயை ஜொலிக்க விட்டனர்.

இந்நிலையில் மீண்டும் வெற்றிக்கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர். தல படத்தை மே 1ல் வெளியிட வேண்டும் என்று படக்குழு இடைவிடாமல் ஷூட்டிங் நடத்தி வருகிறார்களாம். படத்தின் சில காட்சிகளில் அஜீத்துக்காக ஒரிஜினல் கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளதாம்.

வரும் மே1ல் படம் ரிலீஸ் எலக்சன் ரிசல்ட் மே 23ம் தேதி வருகிறது. ஆனால் எலக்சன் ரிசல்ட்டுக்கு முன்பே தலயின் நேர் கொண்ட பார்வை ரிசல்ட்டை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.