தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா

நாடாளுமன்றதேர்தல் பல்வேறு கட்டங்களாக இந்தியாவில் நடக்க இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வரும் 18ல் முதல் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. உள்ளூர் போலீசார் மட்டும் இன்றி துணை ராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் உள்ளது.ஆங்காங்கே சோதனைகளில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கான சிறப்பு டிஜிபியாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் சம்பந்தமான வன்முறை வழக்குகள் போன்ற பிரச்சினைகளுக்கு இவர்தான் உரிய முடிவு எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.