Connect with us

சென்னையில் போலி இ-பாஸ்: தலைமை செயலக ஊழியர் உள்பட ஐவர் கைது

செய்திகள்

சென்னையில் போலி இ-பாஸ்: தலைமை செயலக ஊழியர் உள்பட ஐவர் கைது

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இ-பாஸ் முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக போலி இ-பாஸ் வலம் வந்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்தபோது போலி இ-பாஸ் அச்சடித்து கொடுப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தலைமைச் செயலக ஊழியர் என்பதும் மீதி நால்வர் அரசு ஊழியர்கள் என்பதும் அதிர்ச்சியான தகவல் ஆகும்

இதனை அடுத்து போலி இ-பாஸ் தயாரித்து வழங்கிய தலைமைச் செயலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள ஒரு இடத்தில் இவர்கள் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக தெரிகிறது. இந்த போலி இ-பாஸ்க்காக ரூபாய் 3000 முதல் 5000 வரை பெற்றுக் கொண்டு தயாரித்த கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள

தலைமைச் செயலக ஊழியர் உள்பட அரசு ஊழியர்கள் போலி இ-பாஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
To Top