Connect with us

பிரபாஸ் படத்தின் படப்பிடிப்புக்கு துபாய் அரசு அனுமதி மறுப்பு

பொழுதுபோக்கு

பிரபாஸ் படத்தின் படப்பிடிப்புக்கு துபாய் அரசு அனுமதி மறுப்பு

இந்தியாவின் பிரமாண்டமான படங்களான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. பிரபாஸ், ஷாரதாகபூர், நீல்நிதி முகேஷ் நடித்து வரும் இந்த படத்தை சுஜித் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆக்சன் மற்றும் சேசிங் காட்சிகளை துபாயில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு துபாய் அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இருக்கும் என்று கருதுவதால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் துபாய் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் துபாய்க்கு பதிலாக வேறு வெளிநாட்டு லொகேஷனை தேடி வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top