Connect with us

மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் தனுஷ்

பொழுதுபோக்கு

மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் தனுஷ்

தனுஷ் முதன் முறையாக கொடி என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திலும் தந்தை மகன் என இரு வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அடுத்ததாக நடிக்கும் படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார்தான் அந்த படத்தை இயக்குகிறாராம்.

இது தனுசுக்கு 39-வது படம் ஆகும். இந்த படத்தில் சினேகாவும் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டையில் இருவரும் நடித்து இருந்தனர்.

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் தந்தை, மகன் ஆகிய 2 வேடங்களில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகன் தனுஷ், திருடன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தந்தை தனுசுக்கு ஜோடியாக சினேகா வருகிறார். மகன் தனுசுக்கு ஜோடி தேடி வருகிறார்கள். இந்த படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top