தர்ஷனுக்கு வெற்றியை பிச்சை போடாதீர்கள் – வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

50 வது நாட்களைக் கடந்த நிலையில், இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி, இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் ஹோட்டலாக மாறப்போவதாகவும். வரக்கூடிய சிறப்பு விருந்தினரை நன்றாக கவனித்து அனுப்ப வேண்டியது தான் இந்த வாரத்தின் டாஸ்க் எனவும் அறிவிக்கப்பட்டது. 

தர்ஷனுக்கு வெற்றியை பிச்சை போடாதீர்கள் – வனிதா!

அந்த விருந்தினர் வேறு யாருமல்ல நம்ம வனிதாதான்; அவரை பயத்துடனே வரவேற்பளித்தனர் போட்டியாளர்கள்.

சந்திப்புக் கூடத்தில் அனைவரையும் கூடச் சொன்ன வனிதா, வீட்டுக்குள் நடந்த பிரச்னைகள் குறித்து விளாசிவிட்டார் வனிதா விஜயகுமார்.


அனைத்து போட்டியாளர்களும் வெற்றி வாய்ப்பை தர்ஷனுக்கு ஏன் விட்டுக் கொடுக்க நினைக்கிறீர்கள்; தர்ஷனுக்கு மற்றர்கள் ஏதோ முதலிட வாய்ப்பினை பிச்சை போடுவது போல உள்ளது, அது உனக்கு வேண்டுமா? என்று தர் ஷனிடம் கேட்கிறார் வனிதா.

தர்ஷன் அதனை வேண்டாம் என்று கூற, போட்டியை போட்டியாக பாருங்கள் என்று போட்டியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் வனிதா.