கடந்தகாலத்தை மறக்க வேண்டாம்.. ரசிகர்களை வறுத்தெடுத்த கோலி..!!

லண்டன்:

நேற்று ஜூன் 27 ஆம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது.

கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

தோனியின் சிறப்பான ஆட்டம்:

இந்த ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் அருமையாக இருந்தது. தொடக்கத்தில் இவரின் நிதானமான ஆட்டம்தான் இந்திய அணியின் வெற்றிக்கு வழிகோலியது. இருப்பினும் அவரின் மெதுவான ஆட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கோலி கூறியது:

கடந்தகாலத்தை மறக்க வேண்டாம்.. ரசிகர்களை வறுத்தெடுத்த கோலி..!!

தோனி இந்திய அணியின் சிறந்தவீரர், அவருடைய ஆட்டத்தின் போக்கு  ரசிகர்களை எப்பொழுதும் கவர்ந்துள்ளது. ஆனால் தற்போது அவர் நிதானமான ஆட்ட த்தை வெளிப்படுத்துகிறார், இதுவும் ஆட்ட த்திற்கு தேவைதான், அவர் கிரிக்கெட்டில் அனுபவசாலி, அதனால் யாரும் அவருக்கு ஆலோசனை கூறவேண்டியதில்லை என்றார் கோலி.

கடந்த காலம்:

 நாட்டிற்காக பல போட்டிகளில் வெற்றிபெற்று கொடுத்து உள்ளார். அதனால் கடந்த காலத்தை எப்போதும் மறக்கக்கூடாது, ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்வியினால் அவரைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.