வனிதாவை மட்டும் வெளியேற்றாதீர்கள்… ரசிகர்கள் வேண்டுகோள்

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.


சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை பற்றி பேசி முடித்து அறிவுரை கூறுவார். அத்துடன் அந்த வாரத்தில் வெளியேறப் போவது யார் என்று குறித்தும் கூறுவார். 

வனிதாவை மட்டும் வெளியேற்றாதீர்கள்… ரசிகர்கள் வேண்டுகோள்



நேற்றைய நிகழ்ச்சியில் முதல் பிரச்சினையாக வனிதா- தர்ஷன் பிரச்சினை சென்றது. கமல் ஹாசன் வனிதாவின் தவறுகளை சுட்டிக் காட்டினார், சிரித்துக் கொண்டே அவரும் நல்ல பிள்ளைபோல சரி சரி என்று சொன்னார்.

அடுத்து நடந்த ப்ராங்கில் மோகன் வைத்யா எலிமினேட் ஆகவில்லை என்று தெளிவாக தெரிந்துவிட்டது. அப்போது ஃபாத்திமா பாபுவைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப் போவது மீராவா? மதுமிதாவா? வனிதாவா? சரவணனா? என்று ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து மீராவில் தொடங்கி, மதுமிதா, சேரன், அபிராமி, ஃபாத்திமா பாபு, தர்ஷன் என அனைவரிடமும் சண்டையிட்டு கார்னர் செய்யும் வனிதா வீட்டை விட்டு வெளியேறினால் பிக் பாஸ் போரடிக்கும் என்பதால், வனிதா வெளியேறக் கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.