Connect with us

சென்னையைச் சேர்ந்தவர்கள் உள்ளே வரக்கூடாது: தண்டோரோ போட்டதால் பெரும் பரபரப்பு

செய்திகள்

சென்னையைச் சேர்ந்தவர்கள் உள்ளே வரக்கூடாது: தண்டோரோ போட்டதால் பெரும் பரபரப்பு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இதனை அடுத்து சென்னையில் பிழைக்க வந்தவர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் கடலூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நிர்வாக ஊழியர் ஒருவர் தண்டோரோ அடித்து சென்னையில் இருந்து யாரும் தங்கள் கிராமத்திற்கு வரக்கூடாது என்று கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது

அந்த வீடியோவில் ஒரு மனிதர் தண்டோரோ போட்டு, ‘சென்னையிலிருந்து வரும் யாரையும் நம் ஊரில் சேர்க்கக்கூடாது என்றும், அப்படி சேர்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சின்ன சின்ன கிராமங்களில் இருந்து பிழைக்க வந்தவர்களை எல்லாம் வந்தாரை வாழவைக்கும் நகரமாக இருந்தது சென்னை. ஆனால் தற்போது சென்னையில் இருந்து யாரும் வரக்கூடாது என்று தண்டோரா போடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது

Continue Reading
To Top