Connect with us

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொதுச்செயலாளரும் பேராசிரியருமான க.அன்பழகனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

94 வயதான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top