Connect with us

ஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி: டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் முன் ஜாமீன் மனு

செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி: டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் முன் ஜாமீன் மனு

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இன்று காலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதை அடுத்து அதே பிரச்சனையில் சிக்கியுள்ள மேலும் இரண்டு திமுக எம்பிக்கள் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர்.

திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் சமீபத்தில் தலைமைச்செயலாளரை சந்தித்தபின் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதியை அடுத்து திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர்களும் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top