Connect with us

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: மூன்றாவது திமுக எம்எல்ஏ என்பதால் பரபரப்பு

செய்திகள்

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: மூன்றாவது திமுக எம்எல்ஏ என்பதால் பரபரப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி ஆகியோர்களுக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டுள்ளது. இதில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

ஏற்கனவே திமுகவை சேர்ந்த ஜெ அன்பழகன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது எம்எல்ஏவாக செய்யூர் தொகுதி எம்எல்ஏ கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா தொற்று தாக்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top