Connect with us

ஆர்.எஸ். பாரதியை கைது விவகாரம்: போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதம்

செய்திகள்

ஆர்.எஸ். பாரதியை கைது விவகாரம்: போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதம்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் முயற்சி செய்ததாகவும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் எடுக்க சட்டரீதியிலான முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும், அடுத்தது தயாநிதி மாறன் வெயிட்டிங் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top