அமைச்சர்களுடன் தேமுதிக நள்ளிரவு வரை ஆலோசனை

மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் முன்னிலையில் தே.மு.தி.க. நேற்று இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி இறுதி செய்யப்படாமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று பிற்பகல் தே.மு.தி.க. துணைச் செயலாளர் சுதீஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு பியுஸ் கோயல், வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் சுதீஷ் மீண்டும் சந்தித்துப் பேசினார். 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.