கூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு

உடல் நிலை நலிவுற்றதன் காரணமாக தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார்.

உடல் நிலை முற்றிலும் குணமாகி இன்று வருவதாக நேற்று முன் தினமே தேமுதிக தலைமை கழகம் அறிவித்தது.

அதன்படி இன்று காலை முதலே அளவுக்கு அதிகமான தொண்டர்களால் சென்னை விமான நிலையம் நிரம்பி வழிந்தது.

கேப்டனை பார்த்த ரசிகர்கள், தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின்

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல்லா கட்சியும் அதாவது பெயரை குறிப்பிடாமல் நீங்க தமிழ்நாட்டில் எந்த எந்த கட்சி பெரிய கட்சின்னு நினைக்கிறிங்களோ அந்த கட்சி எல்லாம் கூட்டணிக்காக அணுகுகிறார்கள்.

கூட்டணி குறித்து விரைவில் கேப்டன் அறிவிப்பார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.