தீபாவளி பண்டிகையின்போது படைக்கப்படும் இனிப்பு வகைகள்!!!

பண்டிகை என்பதைத் தாண்டி குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு திருவிழாவாக இருப்பது இந்த தீபாவளியே ஆகும்.

இதனை பலரும் ஒருநாள் விழாவாக எண்ணாமல் ஒருவார திருவிழா போல் கொண்டாடுவர்.

அதாவது ஒரு வாரம் முன்பே பெண்கள் இனிப்பு மற்றும் கார வகைகள் வீட்டில் செய்யத் துவங்கி விடுவர்.

1aa8095d7dcbb0b4518f97050cc53b6c-2

கார வகைகளில் பெரிதாக அதிக அளவிலான வகைகள் இருக்காது, ஆனால் இனிப்பு வகையினைப் பொறுத்தவரை ஜிலேபி, லட்டு, இனிப்பு பூந்தி, மைசூர் பாகு, ஜாங்கிரி, பால் கோவா போன்ற பொருட்கள் இடம்பெறும். ஆனால் இவற்றை வீட்டில் செய்வது கடினம் என்பதால் குலோப் ஜாமுன், பருப்பு போலி, மைதா இனிப்பு கேக் போன்றவைகளே வீட்டில் செய்யப்படும்.

இதனுடன் கூடுதலாக முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்களான உளுந்து வடை, பருப்பு வடையினை செய்வர், படைத்து முடித்த பின்னர் அந்த பலகாரங்களை அருகில் உள்ள வீட்டினருக்கு கொடுத்து மகிழ்வர்.

கடைகளைப் பொறுத்தவரை அனைத்து வகையான இனிப்பு பொருட்களும் தீபாவளி ஸ்பெஷல் வகைகளாக போடப்பட்டிருக்கும்.

கார வகைகளைப் போல் இதனை வீட்டி செய்வதனை விட வெளியிலேயே வாங்கி படைப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.