தொடர்ந்து மோடியை திட்டி வரும் திவ்யா ஸ்பந்தனா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் எஸ்.எம் கிருஷ்ணா . இவர் தற்போது பிஜேபியில் உள்ளார். இவரது பேத்தி தான் திவ்யா ஸ்பந்தனா. குத்து என்ற படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து ரம்யா என்ற பெயரில் குத்து படத்தில் நடித்ததால் குத்து ரம்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்தவர் இவர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார் இவர்.

டுவிட்டரில் இவர் வெளியிட்ட பதிவில்

பிரதமர் மோடியின் புகைப்படத்தின் மீது “உங்களுக்குத் தெரியுமா? மோடியின் ஆதரவாளர்களில் மூவரில் ஒருவர் முட்டாள்கள்.. மற்ற இருவரைப் போலவே” என எழுதி பதிவிட்டதோடு இவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்! மகிழ்ச்சிகரமானது அல்லவா? என அந்தப் படத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்.

இது தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ட்விட்டரில் மிகப்பெரிய மோதலை உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் மற்றவர்களை தாக்கி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமரை ‘திருடன்’ என்று விமர்சித்ததற்காக அவர் மீது தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.